• காவல் கோட்டம் தமிழின் மிகச்சிறந்த ஐந்து நாவல்களுள் ஒன்று.
 • வளமார்ந்த மொழிநடை, கூர்மையான உரையாடல்கள், குறிப்புணர்த்தும் தன்மை...
 • தமிழ் இலக்கிய மரபின் தனிச் சிறப்பான நிலமும் பொழுதும் முதற்பொருளாக வரும் விரிவான கவித்துவ வர்ணனைகள் ஏரராளம்.
 • முறைமையில் திரிந்த முல்லை நிலத்தின் ஒவ்வொரு கருப்பொருளுக்கும் அதன் உரிப்பொருளுக்கும் ஊடாகக் கதை மோப்பம் பிடித்துச் செல்கிறது.
 • தமிழ் நவீன புனைகதைப் பரப்பில் இந்நாவலில்தான் காதல், வீரம், தியாகம் என்ற விழுமியங்களுக்கு நிகர்நிற்கும் செவ்வியல் பண்புள்ள கதைமாந்தர்கள் வருகின்றனர்.
 • வஞ்சகம், துரோகம், பொறாமையால் அழிவுக்கு ஆட்படும் மனித நாடகங்கள்.
 • நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் கதைமாந்தர்கள் வெளிறியவர்கள் (விதிவிலக்குஅஞ்சலை) என்ற குறை இந்நாவலால் நீங்கியது. அடர்வண்ணங்களால் வரையப்பட்ட பெண்கள் இந்நாவலில் உயிர்ப்புடன் உலவுகிறார்கள்.
 • காலமெனும் பேராற்றின் கரையில் மணற்சிற்றில்களாகப் பேரரசுகளும் கோட்டை கொத்தளங்களும் எழுந்து அழியும் பிரம்மாண்டமான வரலாற்றுச் சித்திரத்தை இந்நாவல் வரோகிறது.
 • போர்களையும் வன்முறைகளையும் பஞ்சங்களையும் இயற்கைப் பேரழிவுகளையும் மனிதன் தன் முயற்சியால் கடந்து செல்லும் ஊக்கமும் முனைப்பும் இந்நாவலில் தெறிக்கின்றன.
 • நெடிய வரலாற்றுப் பகைப்புலத்தில், மாறிச்செல்லும் பண்பாட்டுச் சூழல்களில், என்றும் மாறாத மனித உணர்வுகளின் போராட்டத்தில் புதிய இலக்கியச் சுவை துலங்குகிறது.
 • இதன் கதை சொல்லும் பாங்கு யதார்த்தவாத வகைமையைச் சார்ந்ததெனினும், மொழித்திறன் ஆங்காங்கே ப.சிங்காரத்தை நினைவூட்டினாலும், வெங்கடேசனின் தனித்தன்மையும் மிளிர்கிறது.
 • வாழ்க்கையைப் பிரதியெடுக்கத் தேவையான நுண்தகவல்களும், அகச் சித்தரிப்புமே ஒரு நல்ல நாவல் உருவாக அடிப்படை. அவை இந்நாவலில் நிகழ்வுகளோடு நுட்பமாக நெய்யப்பட்டுள்ளன.
 • நம்பிக்கையும் மெல்லுணர்வுகளும் கொண்ட அழகியல் பார்வை, மானுடத்தின் கசப்பையும் இருளையும் குறிப்புணர்த்தி விட்டு விலகிச் செல்கிறது.
 • செவ்வியல் மார்க்சியத்தின் சமூக இயங்கியல் கண்ணோட்டத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது; இதன் கலாபூர்வமான தருணங்கள் எண்ணிறந்தவை.
 • செவ்வியல் மார்க்சியத்தின் சமூக இயங்கியல் கண்ணோட்டத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது; இதன் கலாபூர்வமான தருணங்கள் எண்ணிறந்தவை.
 • மதுரை நகரின், மதுரை அரசின், தென்தமிழகத்தின் 600 ஆண்டு கால வரலாற்றைக் கூறுகிறது.
 • விஜயநகர, பிரிட்டிஷ் பேரரசுகளின் விரிவாக்கம், ஆட்சிமுறைகளை விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கிறது.
 • பத்தாண்டு காலக் கள ஆய்வு, நாட்டார் கதைகள், வாய்மொழி மரபு ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றின் விடுபட்ட கண்ணிகளை இணைக்கிறது.
 • வரலாற்றுப் போர்வையால் மறைக்கப்பட்டுவிட்ட முந்தைய வாழ்வியல் செய்திகளைப் பார்வைக்கு வைக்கிறது.
 • இதுவரை சொல்லப்படாத வரலாற்றுச் செய்திகள் சிலவும் வெளிச்சமிடப்படுகின்றன.
 • 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் தென்னிந்திய மண்ணில் நிகழ்ந்த பெரும்பாலான போர்களையும் அதிகார மாற்றங்களையும் விவரிக்கிறது.
 • நாவலின் முதல் பாகத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட கற்பனையாக அன்றி வரலாற்றிலிருந்தே விரிக்கப்பட்டுள்ளன.
 • காலந்தோறும் மாறிவருகிற நாட்டு நிர்வாகத்தையும் நீதிமுறையையும் படம்பிடிக்கிறது.
 • காலனி ஆட்சியின் மாற்றாந்தாய்ப் போக்குகளை ஆதாரங்களுடன் சுட்டுகிறது.
 • ஐரோப்பிய பாணிக் கல்வி, ரயில், மெட்டல் சாலைகள், காட்டன் மில், நவீன தொழில்நுட்பங்களின் வருகையை விரிவாகக் கூறுகிறது.
 • முல்லைப் பெரியாறு அணைக்கான திட்டமிடல், கட்டுமானம், பாசனப்பரப்பு உருவாக்கம், வைகை வடகøர மக்களின் புதிய வேளாண் செழிப்பைக் கொண்டாடுகிறது.
 • பழைய காவல்முறையை ஒழித்து அதன் புதைகுழியின்மேல் புதிய காவல்துறை உருவான கதை, இதனைத் தொடர்ந்து வந்த குற்றப் பரம்பøரச் சட்டம், காலனி அரசின் அடக்குமுறை ஆகியவற்றை ஆதாரப்படுத்துகிறது.
 • காலங்களினூடாக விரிவாக்கப்படுகிற மீனாட்சி கோவில், மதுரையின் வளர்சிதை மாற்றங்கள் அழகாகக் காட்சிப்படுகின்றன.
 • பெருமதகுல தெய்வ வழிபாடு, விழாக்கள், வாழ்க்கை வட்டச் சடங்குகளை விரிவாகக் கூறிச் செல்கிறது.
 • இரு பெரும் பஞ்சங்கள், வெள்ளம், கொள்ளை நோய்களால் நிகழ்ந்த பேழிவுகளை மனம் பதைக்கப் புலம்புகிறது.
 • இனவரைவியல் பார்வையில் சமூகப்போக்குகளை விளக்குகிறது.
 • தமிழ்ச்சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணையக்கூடாமல் ஒதுக்கப்பட்டு களவுக்குத் தள்ளப்பட்ட ஓர் இனக்குழுவின் வாழ்வியலை உயிர்த்துடிப்புடன் சித்தரிக்கிறது.
 • இடையூறுகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் நடுவில் வாழ்க்கையைக் கொண்டாடும் கோலங்களை நகைச்சுவை தொனிக்கச் சொல்கிறது.

Vikatan Publications


757, அண்ணாசாலை, சென்னை - 600 002.

தொலைபேசி: +91 44 2854 5500 / 5588 / 3300


  கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
  வேட்ப மொழிவதாம் சொல்.