ஆறு நூற்றாண்டு கால மதுரையின் வரலாற்றைப் (1310-1910) பின்னணியாகக் கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோட்டங்களுடன் அந்த வரலாற்றின் திருப்புமுனைகளையும் தீவிரமான தருணங்களையும் திரும்பிப் பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது.

புதிய உத்திகள். தேர்ந்த சொற்கள். வளமான மொழிநடை. கூர்மையான உரையாடல்கள். கனக்கும் மொனங்கள். உள்ளுறை அர்த்தங்கள்...

வாசகனின் கற்பனைக்கு இடம் விட்டுத் தாண்டிச் செல்வதாகவே இந்நாவலின் பெரும்பகுதி இருக்கிறது. தமிழ்ப் புனைகதையின் கலாபூர்வமான வெற்றிகளில் இது மற்றுமோர் சாதனை.